வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்;
வக்ஃப் திருத்த சட்டம் கொண்டு வந்த மத்திய அரக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு பலத்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தினர் வக்ஃப் திருத்த சட்டம் கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தொண்டர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.