குற்றவாளியை பிடிக்க முடியாமல் உறவினர்களை தட்டி தூக்கிய மதுரை போலீஸ்

மதுரை போலீசார் மயிலாடுதுறையில் அராஜகம் நடவடிக்கைக் கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எஸ்.பியிடம் புகார் மனு;

Update: 2025-04-14 16:18 GMT
. மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியில் விஜயன்(45) என்பவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.  அவரை பிடிப்பதற்கு மதுரை தள்ளாகுளம் போலீசார் 15க்கும்மேற்பட்ட நபர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் நீடூர் பகுதியில் விஜயன் உறவினர்கள்வீட்டில் தேடிப்பார்த்தனர், எங்கும் அவர் கிடைக்கவில்லை, இரவு 2 மணிக்கு விஜயனது பெரியப்பா ஜெயராமன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்து வெளியே இழுத்துச் சென்றனர், இதனைக் கேட்ட அவரது மகள்களை காமக்குரோதமாகத் திட்டி -நாங்கள் மயிலாடுதுறை போலீஸ் இல்லை, மதுரை போலீஸ், என்று மிரட்டியதுடன்- விஜயனை ஒப்படையுங்கள் இல்லை என்றால் வீட்டோடு கொளுத்திவிடுவோம் என்று பயமுறுத்திவிட்டு ஜெயராமனது மகன் அருள்(32) என்பவரையும் அடித்து இழுத்துச் சென்றனர், மேலும் விஜயனின் சகோதரர் முத்துக்கிருஷ்ணன்(32) வசித்த வீட்டிற்குச் சென்று அங்கே தூங்கிக் கொண்டிருந்தவரையும் அடித்துத்துன்புறுத்தி வேனில் தூக்கிப் போட்டுச் சென்றுள்ளனர், உடனடியாக அவரது உறவினர்கள் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர், அதில் எந்த வழக்கும் இல்லாத 3 நபர்களை அடித்து துன்புறுத்தி கடத்திச்சென்றதற்கும் பெண்களை கொச்சை வார்த்தைகளால் திட்டி மிரட்டிய   போலீசார்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடத்திய நபர்களை உடனடியாக   மீட்டுத்தரக் கோரினர், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி உறுதி அளித்தார்.

Similar News