இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு
தேவகோட்டையில் இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்;
தேவகோட்டை முளைக்கட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் கிருஷ்ணன். இவர் அதே பகுதியில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தாலையூரை சேர்ந்த காசிலிங்கம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காட்சிலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மணிகண்டனை தேடி வருகின்றனர்