நகை அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் காப்பீடு சேகரிப்பு முகாம்

வருகிற 24-ம் தேதி தொடங்கி 30 -ம் தேதி வரை நடைபெறுகிறது;

Update: 2025-04-15 10:32 GMT
நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது வருகிற 23 -ம் தேதி நடைபெற இருக்கும் காப்பீட்டு சேகரிப்பு முகாமில், தகுதியுள்ள அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம். அஞ்சல் ஆயுள் காப்பீடு எடுக்க, பட்டதாரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்த அனைவரும் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். மேலும், கிராமத்தில் நிலையான இருப்பிடச் சான்று உள்ளவர்கள் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணையலாம். சிறு, குறு வணிகர்கள், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்கை 0 பேலன்ஸில் தொடங்கி, கியூ ஆர் கோடை பெற்று தங்கள் வங்கி கணக்கில் வரவு செலவு செய்யலாம். ஏற்கனவே, அஞ்சலக சேமிப்பு கணக்கு உள்ளவர்கள், தங்கள் கணக்கை, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்குடன் இணைத்து, குழு விபத்து பாலிசியை ஆண்டுக்கு ரூ.320 செலுத்தி, ரூ.5 லட்சத்திற்கான காப்பீடும், ரூ.55 செலுத்தி ரூ.10 லட்சத்திற்கான காப்பிடும், ரூ.749 செலுத்தி, ரூ.15 லட்சத்திற்கான காப்பீடும் பெற்று பயன்பெறலாம். நாகை அஞ்சல் கூட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் காப்பீடு தொடர்பான முகாம் வருகிற 24-ம் தேதி தொடங்கி 30 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, அனைத்து பொதுமக்களும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News