மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்;

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற சமுதாய அமைப்புகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருதிற்கு வருகின்ற 25.04.2025-ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டாரங்களிலுள்ள குறிப்பிட்ட அலகுகளில் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்தெரிவித்துள்ளார்