எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது
சிவகங்கையில் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்;

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செல்வபிரபு. இவர் இலந்தங்குடிப்பட்டி கண்மாய்க்கரை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது புதுப்பட்டியைச் சேர்ந்த திருமலை, கண்ணப்பன், மணிகண்டப்பிரபு ஆகிய மூவரும் வாளை காட்டி எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் அவர்களிடம் இருந்து 1 இருசக்கர வாகனம் மற்றும் 3 வாளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்