வீட்டு வேலை பார்க்க சொன்னதால் கல்லூரி மாணவி தற்கொலை
தேவகோட்டை அருகே வீட்டு வேலை பார்க்க சொன்னதால் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்;

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அனுமந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகள் அபிநயா (வயது 18). இவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது பாட்டி அவரை வேலை செய்யச் சொன்னதாக கூறப்படும் நிலையில் கோபமடைந்த அவர் அருகில் உள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்