ராணிப்பேட்டையில் விவசாய நிலத்தில் கிடந்த அம்மன் சிலை

விவசாய நிலத்தில் கிடந்த அம்மன் சிலை;

Update: 2025-04-15 16:02 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வெங்கடாபுரம் கோபி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இன்று அம்மன் கற்சிலை கிடந்தது. இது குறித்து நிலத்தின் உரிமையாளர் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தார். வருவாய்த் துறையினர் அங்கு வந்து சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சிலையை விவசாய நிலத்தில் வீசிவிட்டு சென்றது யார் என நெமிலி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News