வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக மோசடி
காரைக்குடியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் சரவணகுமார். இவர் வெளிநாட்டு வேலைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தபோது வாட்ஸ் அப்பில் அவரை தொடர்பு கொண்ட ஒருவர் போலியாக விசாவை அனுப்பி ரூபாய் 6.50 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என சிவகங்கை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்