வேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி ங

மதுரை உசிலம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சிறுமி பலியாகியுள்ளார்.;

Update: 2025-04-16 01:09 GMT
மதுரை மாவட்டம் சாப்டூரை சேர்ந்த தமிழரசன்( 59). இவரது மனைவி வளர்மதி (42). மகள் சுபஸ்ரீ (26). பேத்தி இலன்இன்பா( 3) ஆகியோர் டி. கல்லுப்பட்டியில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு நேற்று முன்தினம் (ஏப்.14) காலை சென்று விட்டு மதியம் சாப்டூர் செல்வதற்காக ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது பேரையூர் சாலையில் தம்பிபட்டி அருகே ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த வேன் மீது இவர்கள் வந்த ஆட்டோ மோதியதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வளர்மதி, சுபஸ்ரீ, இலன்இன்பா மூவரும் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 3 வயது சிறுமி இலன்இன்பா நேற்று (ஏப்.15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News