திருமயம், ராயவரம் பகுதியில் அதிமுக பொறுப்பாளர்களுக்கு நேற்று அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மற்றும் கள ஆய்வு நடைபெற்றது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து தலைமையில், கழக விவசாய பிரிவு இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலையில் பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் பலரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.