தேசிய புள்ளியியல் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தேசிய புள்ளியியல் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்;
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்ச கத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தில் 75-வது ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி தேசிய புள்ளியியல் துறை விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் இன்று நடைபெற்றது. தர்மபுரி பிஸ்என்எல்தொலைபேசி நிலையம் அருகில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட தேசிய புள்ளியியல் அலுவலக முதன்மை புள்ளியியல் அலுவலர் மதிவாணன் கொடிய அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் போது புள்ளியியல் துறை அலுவலகத்தின் செயல்பாடுகள், சேவைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தர்மபுரி நகராட்சி பூங்கா அருகில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலக பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.