தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு

பராமரிப்பு;

Update: 2025-04-17 03:48 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் தங்கி கிராமப்புற வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், விவசாய நிலங்களில் இயற்கை முறையிலான தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் தக்காளி, கத்திரிக்காய், மிளகாய் போன்ற தோட்டக்கலை பயிர்களை நடவு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வேளாண் கல்லுாரி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமையாசிரியர் கந்தசாமி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News