மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
மதுரையில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது;
மதுரை மாநகர் சிறப்பு சிறுவர் நலப்பிரிவு பிரிவில் (JAPU) பணிபுரிந்த தலைமை காவலர் திரு. ராஜு அவர்கள் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி மாதம் இயற்கை எய்தினார். மறைந்த தலைமை காவலருடன் காவல்துறையில் பணியில் சேர்ந்த (2000 பேட்ச்) அவருடைய நண்பர்கள் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில் திரட்டிய பணத்துடன் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் பங்களிப்பையும் சேர்த்து ரூ.1,55,000/-க்கான காசோலையை தலைமை காவலரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் 2000-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.