திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலையம் திறப்பு

மதுரை திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்கென்று தனியாக புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டது;

Update: 2025-04-17 08:52 GMT
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கென துவக்கப்பட்ட புதிய காவல் நிலையம் திறப்பு விழா நேற்று (ஏப்.16) பூஜையுடன் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் அரசால் அறிவிக்கப்பட்டு ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., க்கள் உள்பட 29 பேர் நியமிக்கப்பட்டனர். இது தற்காலிகமாக கோயிலுக்கு முன்புள்ள புறக்காவல் நிலையத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது பெரியரத வீதி தனியார் மண்டபத்தில் கோயில் காவல் நிலையம் செயல்பட முடிவு செய்யப்பட்டு நேற்று காலை சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். மதுரை தெற்கு காவல் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் திறந்து வைத்தார். திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் சசிப்பிரியா, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள், மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா, இன்ஸ்பெக்டர்கள், ராஜதுரை, மதுரைவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News