பேவர் பிளாக் சாலை பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

நாட்டரசன் கோட்டையில் பேவர் பிளாக் சாலை பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-04-17 12:00 GMT
நாட்டரசன்கோட்டை முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் (17.04.2025) கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் திரு.விஜயகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, காளையார்கோவில் வட்டாட்சியர் முபாரக், பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பசலிக்கா ஜான்சி உட்பட பலர் பங்கேற்றனர்

Similar News