காலை உணவு திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு
கொல்லங்குடியில் காலை உணவு திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;
சிவகங்கை மாவட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்றையதினம் (17.04.2025) காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் கொல்லங்குடி ஊராட்சிக்குட்பட்ட தொடக்க பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாணாக்கர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார்.