மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்ப்பாட்டம்
மதுரை மேலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
மதுரை மாவட்டம் மேலூரில் மத்திய அரசு வக்பு வாரிய திருத்த சட்டமுன் வடிவை திரும்ப பெற கோரி தொடர் முழக்கப் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மேலூர் தாலுகா குழு சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு இன்று (ஏப்.17) மாலை போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.சாகுல்ஹமீது தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், தாலுகா செயலாளர் தனசேகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கண்ணன், ராஜாமணி, தாலுகா குழு உறுப்பினர்கள் மணவாளன், மணி, முத்துலட்சுமி, பன்னீர்செல்வம், விஸ்வநாதன், கணேசன், குமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மத்திய அரசு கைவிடுமாறு கோஷங்களை எழுப்பினர்.