நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில்  சாலையை கடந்து நீண்ட தூரம் சாலையில் ஓடிய கரடியால் பொதுமக்கள் அச்சம்

விரைந்து பிடிக்க வனத்துறை கோரிக்கை;

Update: 2025-04-17 15:00 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில்  சாலையை கடந்து நீண்ட தூரம் சாலையில் ஓடிய கரடியால் பொதுமக்கள் அச்சம் நீலகிரி மாவட்டம் குன்னூர்  சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு, மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் பெட்போர்டு செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதியில்  கரடி ஒன்று சாலையை கடந்து  சாலையில் நீண்ட தூரம் ஓடியதை வாகனத்தில்  சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து  இணையதளத்தில் பரப்பியுள்ளனர் இந்த காட்சி அந்தப் பகுதி குடியிருப்பு  வாசிகளை அச்சமடைய செய்துள்ளது.

Similar News