திக் திக் நிமிடங்கள் திகிலூட்டும் பாதையில் இயற்கையோடு ஒரு உரையாடல்
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருப்பினும் சுற்றுலா பயணிகள் அதிகமாக இயற்கையையும் வனப்பகுதிகளையும் விரும்பி மலை மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர்.;
திக் திக் நிமிடங்கள் திகிலூட்டும் பாதையில் இயற்கையோடு ஒரு உரையாடல் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருப்பினும் சுற்றுலா பயணிகள் அதிகமாக இயற்கையையும் வனப்பகுதிகளையும் விரும்பி மலை மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். என்னதான் பூங்காக்களையும் இயற்கை காட்சிகளையும் காண்பது மகிழ்ச்சியாக இருப்பினும் வனப்பகுதிகளுக்குள் நடந்து சென்று திகிலான அனுபவத்தை பெறுவது பலருக்கும் பிடித்தமானதாக உள்ளது. இதற்காகவே வனத்துறையின் மூலமாக ஊட்டி மஞ்சுர் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது கேர்ன்ஹில் சுற்றுச்சூழல் பூங்கா இந்த பூங்கா நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தோடர் பழங்குடியின பெண்கள் பராமரிப்புகளை மேற்கொள்கின்றனர். இந்த வனப்பகுதிக்குள் காட்டு மாடுகள் சிறுத்தை மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களும் இந்த வனப் பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டுள்ளது. இந்த பூங்காவிற்கு நுழைந்த உடன் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு இருவது ரூபாயும் சிறியவர்களுக்கு பத்து ரூபாயும் போட்டோ சூட் மற்றும் வீடியோ சீட்டுகளுக்கு தனித்தனியாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மேலும் இதில் இயற்கையாகவே உள்ளதைப் போல செயற்கை விளக்குகள் மற்றும் பறவை இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்களும் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றாள் மரத்தின் மீது தொங்கு பாலம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மகிழும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து மகிழ்ந்து ஆனந்தத்தில் திளைக்கின்றனர். இந்தப் பாதையின் வழியாக இருபுறங்களும் அடர்ந்த மரங்கள் மற்றும் புதர் செடிகளுக்குள் சாலையில் நடந்து சென்றாள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்சி முனை ஒன்று உள்ளது. அமைதியாக பறவைகளின் சத்தங்களுடன் இயற்கை ரசிப்பவர்களுக்கு இந்த இடம் ஒரு வரப்பிரசாதமாகவே அமையும். இதுகுறித்து பாண்டிச்சேரியில் இருந்து வருகை புரிந்து சுற்றுலா பயணி ஸ்டீபன் தெரிவிக்கையில் ஊட்டிக்கு இதுவே முதன்முறையாக வருகை புரிந்துள்ளோம். நண்பர்களுடன் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. தொங்கு பாலத்தில் நடந்து வந்தது அருமையாக உள்ளது. வனவிலங்குகளை நேரடியாக காணவே விரும்புகிறோம் இதுவரையிலும் தென்படவில்லை என தெரிவித்தார்.