பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம்

சுகாதார மருத்துவ சேவைகளை சிறந்து வழங்கும் மாநிலங்களில் முதன்மையாக திகழ்வது தமிழ்நா தான். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.‌;

Update: 2025-04-17 16:50 GMT
பெரம்பலூர் மாவட்டம் பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்தியாவிலேயே பொது சுகாதார மருத்துவ சேவைகளை சிறந்து வழங்கும் மாநிலங்களில் முதன்மையாக திகழ்வது தமிழ்நா தான். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைகளை செம்மையாக செயல்படுத்திடும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டத்தில், பணிபுரியும் ஒவ்வொரு அரசு மருத்துவர்களின் கடமையாகும். அவ்வாறாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பதிவு மற்றும் உள்நோயாளிகள் அனுமதிகளை அதிகப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் மருத்துவ சேவைகளை பெற தனியார் மருத்துவமனைக்கு செல்லும் ஆர்வத்தை தவிர்த்து அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் தங்கள் பணிகளை சிறப்புடன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் இதர பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், கர்ப்பிணிகளுக்கான சுக பிரசவ நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதை தவிர்த்து, ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிறந்த முறையில் சிகிச்சை வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அவசர ஊர்தி (108) 17 என்ற எண்ணிக்கையில் உள்ளது. கை.களத்தூர், அரும்பாவூர் போன்ற உட்கிராமங்களுக்கும் விரைந்து சேவைகள் செய்திடும் வகையில் திட்டமிட்டு செயல்பட 108 மேலாளர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நடமாடும் மருத்துவ குழுவின் மருத்துவ சேவைகளை அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அங்கு வழங்கப்படும் சேவைகள் திறம்பட வழங்கவும், ஆட்டிசம் குழந்தைகளை கூர்ந்து கவனித்து கண்டறிந்து அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும். RBSK திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பள்ளி சிறார் நலவாழ்வு திட்ட சேவைகள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும் கிடைக்க வேண்டும். அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்றார்களா, சிகிச்சை மேற்கொண்டார்களா என்பதை எல்லாம் பின் கவனிப்பின் மூலம் கூர்ந்து கவனிக்க வேண்டும். தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் புதிய நோயாளிகளில் 5% சளி பரிசோதனை செய்து புதிய காச நோயாளிகளை கண்டறிந்து தீவிர சிகிச்சை வழங்க வேண்டும். குடும்ப நல திட்டத்தின் கீழ் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள உயர் வரிசை தாய்மார்களை கண்டறிந்து அவர்களை குடும்பநல திட்டத்திற்கு உட்படுத்த வேண்டும். உடல் நிலை குறைபாடு உள்ள தாய்மார்களின் கணவர்களை ஆண் அறுவை சிகிச்சைக்கு ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் மருத்துவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை சிறந்த முறையில் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஆலத்தூர் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 4 ECG கருவிகள் மற்றும் 2 கணிணிகளை MRF நிறுவனம் வழங்கியது. இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.கே.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.எம்.கீதா, மரு.உதவி திட்ட மேலாளர் (தேசிய சுகாதார குழுமம்) மரு.கலைமணி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.நெடுஞ்செழியன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News