நெடுமானுார், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு, 100 சதவீத கற்றல் அடைவு சோதனை நிகழ்வு நடந்தது. வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் பாக்யம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவ பிரேமா, உதவி தலைமை ஆசிரியர் ராஜா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சங்கீதா, முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுனிதா வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் மலர்க்கொடி கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான 94 மாணவர்கள், செயலி வாயிலாக தமிழ், ஆங்கிலம் வாசித்தல், மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகள் குறித்து, சோதிக்கப்பட்டனர்.