நீலகிரி மாவட்டம் குன்னூரில் உலக பாரம்பரிய தின விழா ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்........
பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சி;
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உலக பாரம்பரிய தின விழா ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்........ உலகப் புகழ் பெற்ற நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து கிடைத்துள்ளதால் உலக வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை மலை ரயில் இயக்கப்பட்டு 152 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், உலக பாரம்பரிய தின விழா நேற்றுகுன்னூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் மாணவ மாணவிகளுக்கு இதையே ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணித்தனர்.