கோடை கால பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் கோடைகால பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்;

Update: 2025-04-18 13:54 GMT
சிவகங்கை மாவட்டத்தில் உறைவிடம் சாரா 2025-ம் ஆண்டிற்கான கோடைக்கால பயிற்சி முகாம் 21 நாட்கள் நடத்தப்படவுள்ளது. அதில். தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கபாடி, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 7401703503 மற்றும் அலுவலக எண் 04575 299293 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News