நீலகிரி குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு மேலும் ஒருவர் படுகாயத்துடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதி......

காவல்துறை விசாரணை;

Update: 2025-04-18 13:56 GMT
நீலகிரி குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு மேலும் ஒருவர் படுகாயத்துடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதி...... நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த இரு வாலிபர்கள் வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை பாய்ஸ் கம்பெனி அருகே அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஹரிஷ் 22 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் வாகனம் ஓட்டி வந்த விமல் படுகாயத்துடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் விபத்து குறித்து வெல்லிங்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவியது.

Similar News