ஆண்டிபட்டி அருகே பணியில் இருந்த மின்வாரிய ஊழியரை ஒருமையில் பேசி தாக்கிய திமுக நிர்வாகி
தாக்குதல்;
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (51) இவர் கடமலைக்குண்டு மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி ஆண்டிப்பட்டி அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவர் தங்கள் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போய் உள்ளதாக கூறி தங்கராஜை செல்போன் மூலம் அழைத்துள்ளார் இதனை அடுத்து தங்கராஜ் அப்பகுதிக்கு சென்று மின் கம்பத்தில் ஏறி சரி பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கே வந்த போஸ் என்பவரின் மகன் ஆனந்த குமார் இன்னும் சரி செய்யவில்லையா என தங்கராஜை ஒருமையில் பேசியுள்ளார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையைக் ஆனந்த குமார், மின்வாரிய ஊழியர் தங்கராஜை முகம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலமாக தாக்கியுள்ளார் இதில் காயமடைந்த தங்கராஜ் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து தங்கராஜ் கடமலைகுண்டு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில் சம்பவம் நடந்து 1 வாரம் கடந்தும் இதுவரை போலீசார் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் இந்நிலையில் பாதிக்கபட்ட தங்கராஜின் உறவினர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர் போஸ் என்பவர் திமுக கட்சியில் கிளை செயலாளராக இருப்பதால் அவரின் அழுத்தத்தின் காரணமாக கடமலைகுண்டு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மின்வாரிய ஊழியரை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது