நீலகிரி மாவட்ட திமுக சார்பில் குன்னூரில் நீர் மோர் பந்தல்.

கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-18 14:27 GMT
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் குன்னூரில் நீர் மோர் பந்தல். மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் அரசு கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் குன்னூர் தந்தி மாரியம்மன் முத்து பல்லாக்கு தேர் திருவிழாவினை முன்னிட்டு மாவட்டக் கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜு அவர்கள் தலைமையில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் க.செல்வம் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.வினோத்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தேர்தல் பணி செயலாளர் - தமிழ்நாடு அரசு தலைமை அரசு கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்களை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர்போஜன், மாவட்டத் துணை செயலாளர் லட்சுமி, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன், வழக்கறிஞர்கள் எஸ். பாபு, குயிலரசன் சிவகுமார், முன்னாள் வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருககுமார், மகளிர் தொண்டரணி துனை அமைபாளர் யசோதா, முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் பாலன், முன்னாள் மாவட்ட சிறுபான்மை குழு உறுப்பினர் CTN பாருக், மீனவர் அணி துணை அமைப்பாளர் ஆட்டோ செல்வம், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் அழகு சேகர், ஒன்றிய பிரதிநிதி செபாஸ்டின் அமுல்ராஜ், நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், டேன்ட்டி விஜயகுமார், தீனதயாளன், கேபிள் சாகய். இளைஞர் அணியினர் ரகுநாதன்,ஸ்ரீதர்,சாஜூ,நந்தகுமார், பாபு, சிஜூ ,மணிகண்டன், அருள், தினேஷ்,குமார், விக்னேஷ், உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News