மத்திகிரி அருகே கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்.
மத்திகிரி அருகே கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்.;
விழுப்புரம் மண்டல சுரங்கம் மற்றும் புவியியல் துறை சிறப்பு தனிப்படை உதவி இயக்குனர் முத்து தலைமையில் நேற்று முன்தினம் ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள மத்திகிரி கால்நடை பண்ணை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல், இரண்டு யூனிட் கற்களை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையெடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து மத்திகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து. டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.