சாலை விபத்தில் வாட்ச் மேன் பலி

மதுரை வாடிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் முதியவர் பலியானார்.;

Update: 2025-04-19 02:47 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சமயநல்லுார் புதுத்தெருவை சேர்ந்த முருகபாண்டி (63) என்பவர் நகரி ஐஸ் கம்பெனி வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (ஏப்.18) காலை சமயநல்லுார் ரயில்வே மேம்பாலத்திற்கு எதிர் திசையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை நோக்கி வந்த கார் மோதி இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News