சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மீது வழக்கு

வழக்கு;

Update: 2025-04-19 05:12 GMT
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 16வயது சிறுமி. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள இறைச்சி கடையில் முபாரக் மகன் வாகித், 18; என்பவர், பணிபுரிந்தார். அவர், சிறுமியிடம் பழகி பாலியல் தொந்தரவு செய்தார். அதை மொபைல் வீடியோவிலும், பதிவு செய்தார்.இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், கடந்த பிப்., மாதம், வாகித் தரப்பை சேர்ந்தவர்கள், சிறுமியின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் முபாரக் மகன் வாகித் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வாகித் உறவினர்கள், ஆரிப், சீமா, ரேஷ்மா ஆகியோர் மீது கொலைமிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News