வாரிசு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்
மதுரையில் இன்று போக்குவரத்து துறையில் பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.;
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இன்று ( ஏப்.19) மாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் போக்குவரத்து துறை அமைச்சர்,சிவசங்கர், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா. சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மேயர், மாநகராட்சி ஆணையாளர், உயர் அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.