குன்னூரில் வாகன நெரிசல்

ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிக்கித் தவித்த வாகனங்கள்;

Update: 2025-04-19 15:37 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ் ராக் காட்சி முனைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் நடுக்காட்டில் சிக்கிய VIP குடும்பத்தினர் மற்றும் IAS.அதிகாரிகள் மூன்று மணி நேரமாக வெளியே வரமுடியாமல் தவிப்பு........ நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா தலங்கலாக டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ் ராக் காட்சி முனை பகுதி. விளள்குகிறது கடல் மட்டத்தில் இருந்து சுமார்  6000 அடி உயரத்தில் உள்ள பள்ளத்தாக்கு பகுதி என்பதால் காட்சி முனையை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறுகிய சாலை என்பதால் சாலையை விரிவாக்கம் செய்ய வனத்துறை அனுமதி மறுப்பதால் சுற்றுலா பயணிகளின்  வாகனங்கள் வந்து செல்வதில் மிகப்பெரிய. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது   இதனால் சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் டால்பின் காட்சி முனையில் இருந்து வெளியே வர முடியாமல் சுமார் 3 மணி நேரமாக. தவித்து வருகின்றனர் மேலும் VIP குடும்பத்தினர் மற்றும் IAS.அதிகாரிகளும் வாகன நெரிசலில் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Similar News