தூய்மை பணி மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்;
உதகையில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், குறைந்த கட்டணத்தில் சுற்றுலாப் பயணிகள் அனைத்து சுற்றுலா ஸ்தலங்களை கண்டு ரசிக்கும் வகையில் சுற்று பேருந்து (CIRCUIT BUS) சேவை துவங்கப்படும். ஒருமுறை டிக்கெட் எடுத்தால் காலை முதல் மாலை வரை பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேட்டி ............ இயற்கையில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்கள் பெரும்பாலானவை வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள நிலையில் தற்போது மே மூன்றாம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் ,நீலகிரி மாவட்டத்தை தூய்மை மிகுந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகள் சார்பில் மாவட்டத்தை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ உதகை பேருந்து நிலையம் முதல், மார்க்கெட், தாவரவியல் பூங்கா வரை தூய்மை பணியை மேற்கொண்டார். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த வணிக நிறுவனங்களுக்கும், கடைகளுக்கு முன்பு சுத்தமில்லாமல் இருந்த வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ,நீலகிரியில் கோடை சீசன் துவங்கப்பட உள்ள நிலையில் காவல்துறை, வனத்துறை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து துறைகள் சார்பில் மாவட்ட முழுவதும் இன்று தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீலகிரிக்கு வர உள்ள சுற்றுலா பயணிகள் நான்கு நாட்களுக்கு முன்பே தங்களது பயணங்களை திட்டமிட்டு E-passயை விண்ணப்பித்து நீலகிரிக்கு வருமாறு கேட்டுக் கொண்ட அவர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்று பேருந்து (CIRCUIT BUS) சேவை துவங்கப்படுவதாக கூறினார். இந்த பேருந்துகள் உதகை தாவரவியல் பூங்கா ,படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல சுற்றுலா ஸ்தலங்களுக்கு இயக்கப்படும் எனக்கூரிய ஆட்சியர் ஒருமுறை இந்த பேருந்தில் டிக்கெட் எடுத்துக் கொண்டால் ஒரு நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம் என்றார்.