ஆவுடையார்கோவில் பொன்பேத்தியைச் சேர்ந்த காளிதாஸ் (27) என்பவர் அறந்தாங்கி மார்க்கெட்டில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து குட்கா பொருட்களையும், ரூ.240யும் பறிமுதல் செய்தனர்.