புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த ஆண்டிக்கோன்பட்டியை சேர்ந்த கணேசன் (60) என்பவர் அவரது இல்லத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 9 லிட்டர் சாராயத்தையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.