புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அரசர்குளம் கீழ்பாதியைச் சேர்ந்த ராஜா (55) என்பவர் அரசர்குளம் பெட்டிக்கடையில் சட்டவிரோத மதுபான பாட்டில்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற நாகுடி காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின் பிணையில் விடுவித்தனர்.