புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கே.வி.கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.