புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடையக்குடி பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.