முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன;

Update: 2025-04-21 04:07 GMT
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை - மானாமதுரை செல்லும் சாலை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Similar News