குப்பிச்சிபாளையத்தில் மனநலம் பாதித்த கணவனை காணவில்லை. மனைவி புகார்.
குப்பிச்சிபாளையத்தில் மனநலம் பாதித்த கணவனை காணவில்லை. மனைவி புகார்.;
குப்பிச்சிபாளையத்தில் மனநலம் பாதித்த கணவனை காணவில்லை. மனைவி புகார். கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் வயது 64. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். கடந்த சில வருடங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த விஸ்வநாதன் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 9 முக்கால் மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. விஸ்வநாதன் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறாததால், விஸ்வநாதனின் மனைவி பாவனல் வயது 55 என்பவர், தனது கணவனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்டு, மாயமான விசுவநாதனை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.