சாக்கோட்டை அருகே இருச்சக்கர வாகனம் திருட்டு
சாக்கோட்டை அருகே இருச்சக்கர வாகனம் திருடு போன நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
சிவகங்கை மாவட்டம், செம்புள்ளனாவயல் பகுதியில், சூர்யா என்பவரின் TN 55 CZ 8507 என்கிற எண் கொண்ட இருசக்கர வாகனம் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் வீட்டிற்கு அருகே நிறுத்தியிருந்த நிலையில் திருடு போனது. இதுதொடர்பாக வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.