அரசு பேருந்து மோதி முதியவர் பலி - போலீசார் விசாரணை

திருப்பத்தூரில் அரசு பேருந்து மோதி முதியவர் பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2025-04-21 12:53 GMT
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (70). இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது காரைக்குடியில் இருந்து தேனி செல்வதற்காக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.‌ இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News