மின்வாரிய அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

மின்வாரிய அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-04-22 03:13 GMT
மின்வாரிய அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தழுவிய தர்ணா போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு, அமைப்பின் கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் தனபால், சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், கிளை பொருளாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, மின்வாரியத்தில் 40- ஆயிரம் ஆரம்பகட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களின் சொந்த ஊர் மாறுதல்,கள உதவியாளராக பதவி மாற்றம், 01-12- 2019 முதல் வழங்க வேண்டிய 6- சதவீத ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரிய நிர்வாகம் நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும், மின் நுகர்வோரை பாதிக்கும் தனியார்மயம்படுத்த வழி வகுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News