தாய் மாயம். மகள் புகார்.
மதுரை உசிலம்பட்டி அருகே தாயை காணவில்லை என்று மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை தொட்டப்நாயக்கனூர் நாட்டாம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி அமுதா( 39) என்பவர் கடந்த 18ம் தேதி மதியம் 3 மணிக்கு உறவினர் வீட்டு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது மகள் சஹானா உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் நேற்று மதியம் தனது தாயை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்