அரசு பேருந்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்;

Update: 2025-04-22 05:56 GMT
தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திராவில் உள்ளது போல மாதாந்திர உதவித் தொகை மற்றும் ஊரக வேலைவாய்ப்பில் 100 நாள் வேலை வழங்குமாறு வலியுறுத்தி இன்று தமிழகத்தின் தலைநகர் சென்னை கோட்டையில் தொடர் முற்றுகையை போராட்டத்திற்கு மாற்று திறனாளிகள் அழைப்பு விடுத்தனர். மேலும் இந்த முற்றுகை போராட்டத்திற்கு தமிழக காவல்துறையால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, இன்று ஏப்ரல் 22 தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் அரசை பேருந்தை முற்றுகையிட்டனர்.அரசு பேருந்து முன்பு அமர்ந்து போரடினார். அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் தர்மபுரி நகர காவல்துறையினர் ஈடுபட்டு சமரசம் செய்தனர்.

Similar News