இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் ஜே.பி ஹோட்டல் எதிரில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு;

Update: 2025-04-22 06:31 GMT
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஜே பி ஹோட்டல் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணிமாறன் என்பவருடைய இருசக்கர வாகனத்தில் திடீரென புகை கிளம்பி மல மலவென தீப்பிடிக்க ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். சம்பவம் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் அருகில் இருந்தவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக சாமர்த்தியமாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவருக்கு எந்த காயமும் இல்லை. மேலும் இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News