ஈசநத்தம் அருகே சாலையைக் கடந்து நடந்து சென்ற மூதாட்டி மீது டூ வீலர் மோதி விபத்து.

ஈசநத்தம் அருகே சாலையைக் கடந்து நடந்து சென்ற மூதாட்டி மீது டூ வீலர் மோதி விபத்து.;

Update: 2025-04-22 10:29 GMT
ஈசநத்தம் அருகே சாலையைக் கடந்து நடந்து சென்ற மூதாட்டி மீது டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,, ஈசநத்தம் அருகே சுக்காம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மனைவி நாகம்மாள் வயது 60. இவர் ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை 6:40 மணியளவில் கரூர் - ஈசநத்தம் சாலையில் நடந்து சாலையைக் கடக்க முயன்றுள்ளார் அப்போது அதே சாலையில் TN 47 AQ 2509 என்ற என் கொண்ட டூவீலரில் வேகமாக வந்த நபர் நடந்து சென்ற நாகம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த நாகம்மாளை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த நாகம்மாளின் மகன் தண்டபாணி வயது 43 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News