வெங்ககல்பட்டி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. காவல்துறை நடவடிக்கை.

வெங்ககல்பட்டி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. காவல்துறை நடவடிக்கை.;

Update: 2025-04-22 10:42 GMT
வெங்ககல்பட்டி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கக்கல்பட்டி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், வெங்ககல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பாலம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கரூர் தாந்தோணிமலை, வசந்தம் நகரை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. ரூபாய் 200 மதிப்புள்ள 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Similar News