தேரப்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற கான்கிரீட் லாரி திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த கார் மோதி விபத்து. தாய் மகள் படுகாயம்.
தேரப்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற கான்கிரீட் லாரி திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த கார் மோதி விபத்து. தாய் மகள் படுகாயம்.;
தேரப்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற கான்கிரீட் லாரி திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த கார் மோதி விபத்து. தாய் மகள் படுகாயம். கர்நாடக மாநிலம், பெங்களூர், பழைய ஏர்போர்ட் ரோடு, கீர்த்தி என் கிளவ் அபார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 47. இவர் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 9 மணி அளவில், கரூர் - மதுரை சாலையில் அவரது காரில் மனைவி ராகினி வயது 41 மற்றும் மகள் டேனிஷா வயது 16 ஆகியோருடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கரூர், வடிவேல் நகர், மில்கேட் பகுதியைச் சேர்ந்த கார்த்தி வயது 33 என்பவர் தனது கான்கிரீட் லாரியை வேகமாக ஓட்டி, ராஜாவின் காருக்கு முன்பாக சென்று, தேரப்பட்டி பிரிவு அருகே எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டார். அப்போது பின்னடி வந்த ராஜாவின் கார் கார்த்திக்கின் கான்கிரீட் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த ரோகினி மற்றும் டேனிஷா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ராஜா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கான்கிரீட் லாரியை சாலை விதிகளுக்கு புறம்பாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.