மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்து நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது கார் மோதி உயிரிழப்பு.

மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்து நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது கார் மோதி உயிரிழப்பு.;

Update: 2025-04-22 12:27 GMT
மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்து நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது கார் மோதி உயிரிழப்பு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர்-கோவை சாலையில், மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஏப்ரல் 20 ஆம் தேதி இரவு 11 மணியளவில் நடந்து சாலையை கடக்க முயன்று உள்ளார். அப்போது,கரூர் மாவட்டம், குளித்தலை, பனிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது 27 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், நடந்து சென்ற நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அடையாளம் தெரியாத நபரை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டாங் கோவில் கீழ்பாகம் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்தவர் என தெரிய வந்தது. எனவே உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை அடையாளம் காண்பதற்காக, அதே மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, இது தொடர்பாக இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது உறவினர்கள் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News